கல்வெட்டியல்

//#பழனி முருகன் சிலையை செய்த #குடும்பரான சித்தர் #போகர் //

18 சித்தர்களில் ஒருவரான போகர் சித்தர் – #குடும்பர் குலத்தை சார்ந்தவர் என்பது அவரை குல தெய்வமாக வணங்கி வரும் பழநி ஆய்க்குடி மள்ளர்களான – #சப்பிளி #குடும்பன் வகையறா மூலம் அறிந்துகொள்ள முடியும்.

இது

1528 ஆம் ஆண்டு பழனி #செப்பு பட்டயத்தின் ஆவண தகவல் படி,

தேவேந்திரர்களில் 108 நாட்டு தலைவர்களான

#குடும்பமார்களும்,

மூப்பர்களும்

பண்ணாடிமார்களும்

பழனி முருகன் கோயிலில் கூடி,
அக் கோயிலை நிர்வகிப்பது பற்றி முடிவெடுத்த போது,

அக் கூட்டத்தில் #பழனி #ஆயக்குடி சார்பாக கலந்து கொண்டவரான

சப்பிலிக் #குடும்பனின் குலதெய்வமும்,

பழனி முருகன் சிலையை செய்தவருமான

போகர் #சித்தர் கோயிலில்,

சப்பிளிக் குடும்பனின் வம்சத்தினருடன் #செல்வா பாண்டியர், திருப்புர் தங்கராசு, #ஆயக்குடி சின்னத்துரை, முருகேசன், கோவை #கோப்மா கருப்புச்சாமி மள்ளர் ஆகியோருடன் நான் ( மருத்துவர் கணபதி குடும்பனார்)

இடம்:
பொன்னிமலை,
சுந்தரபாண்டிய நல்லூர்,
ஆயக்குடி……பழநி
திண்டுக்கல் மாவட்டம்

இந்த பழனி ஆய்குடியில் இருக்கும் #இடும்பன் கோவிலும் குடும்பர்களின் குல தெய்வமாகவும், பரம்பரை அறங்காவலர்களாகவும் இருந்து வருகின்றனர்.

தகவலுக்காக இந்த பதிவு

இவண்

வேளாண் விஞ்ஞானி முனைவர் ரா தங்கச்சாமி மதுரை

மள்ளர் வரலாற்று ஆய்வு மையம்

தென்னிந்திய கல்வெட்டு குறிப்புகளில் குடும்பர் களுக்கு #மள்ளர்பள்ளர் #பெருந்தேவப்_பள்ளன் .

அதாவது தேவேந்திரர்களுக்கு #தேவர் என்ற பட்டம் இருந்துள்ளது.

(1)…பள்ளர்கள் நிலங்களுக்கு உரிமையாளராக இருந்ததற்கும் கோவில்களுக்குத் தானம் வழங்கும் அளவுக்கு பணம் படைத்தவராக இருந்தமைக்கும் சிலசான்றுகள் உள்ளன. தஞ்சை பெருவுடையார் கோவிலில் விளக்கெரிக்க ஆடுகளைத் தானம் வழங்கியதைக் குறிப்பிடும் நீண்ட கல்வெட்டொன்று உள்ளது.இவ்வாறு தானம் வழங்கியவர்களுள் ஓலோக மாறாயன், பள்ளன், கூத்தன், பள்ளன் கிழான், முகத்தி எழுவன் என்ற பள்ளர்களும்அடக்கம்.
(தெ.இ.க.II பகுதி 4:95 வரி 75,76).

(2)….திருமயம் வட்டம் மேலத்தானையம் மாரியம்மன் கோவிலுக்கு முன்பாக இருக்கும் கல்தூணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்றுவீரசின்னு நாயக்கர் என்ற குறுநில மன்னன் காலத்தில் விருதுகள் தொடர்பாக பள்ளருக்கும் பறையருக்கும் இடையே நிகழ்ந்த பூசலைத்தெரிவிக்கிறது. வெள்ளானை, வாழை, கரும்பு ஆகிய விருதுகள் தங்களுக்கு மட்டுமே உரியதென்றும் பறையர்களுக்கு இல்லையென்றும்கூறி, கொதிக்கும் நெய்யில் பள்ளர் கைமுக்கினராம். அவர்கள் கை சுடாமையால் இவ்விருதுகள் பள்ளருக்கு மட்டுமே உரியதென்று தீர்ப்புவழங்கப்பட்டதாக இக்கல்வெட்டு தெரிவிக்கிறது (IPS 929).

(3) திருமலை நாயக்கர் காலத்தில், குடும்பர் சாதியினருக்கு “திருமலைக் குடும்பர்” என்ற பட்டம் வழங்கப்பட்டதன் பின்புலத்தை ஒரு கல்வெட்டுதெரிவிக்கிறது. திருவில்லிப்புத்தூரில் தேவேந்திரக் குடும்பருக்கும் பறையருக்கும் ஏற்பட்ட பூசலை ஒட்டியே இப்பட்டம்வழங்கப்பட்டுள்ளது..

(4)..பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பாண்டிய மன்னன் ஒருவன் தேவேந்திரனுடன் சமமாகஅமர்ந்து நான்கு தேவ கன்னியரையும் கரும்புக்கணுக்களையும், வாழைக்கன்றுகளையும் ஒரு பனங்கொட்டையையும் பல வகையானநெல்வித்துக்களையும், காளை ஒன்றையும் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்தான். இக்கடும் பஞ்சகாலத்தில் பனிரெண்டாயிரம்கிணறுகளை ஒரே நாளில் தோண்டி பாசன வசதியை, தேவேந்திரக் குடும்பன் உருவாக்கினான். இப்பணியை மதித்து தேவேந்திரக்குடும்பனுக்கு சில சலுகைகளை வழங்கினர். இதன்படி வெள்ளை யானை, தீவட்டி, நடைபாவாடை, இரட்டைச் சிலம்பு, இரண்டு கொடுக்கு,பதினாறு கால் பந்தல், இறப்பில் மூன்றடுக்குத் தேர் பயன்படுத்தல், பஞ்சவன் என்ற பட்டம், பதினெட்டு வகை இசைக்கருவிகள், கனகதப்புஆகியன தேவேந்திரக் குடும்பருக்கு உரியன. இவை தமக்கும் உரியன என்று கூறி பறையர்கள் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினர்.வாகைக்குளத்தைச் சேர்ந்த குட்டி குடும்பனும் மலையன்குளத்தைச் சேர்ந்த அல்லகாரக் குடும்பனும் மன்னனைச் சந்தித்துப் பறையர்களின்இச்செயல் குறித்து முறையிட்டனர். முன்னர் வெளியான செப்புப்பட்டயங்களின் அடிப்படையில் திருவிழாக்களில் மூன்றுகால் பந்தல்இடுவதும், ஒரு கொடுக்கு, ஒரு சாம்பு, ஒரு மப்பு, ஒரு தீப்பந்தம், மாடியில்லா வீடு ஆகியன பறையருக்குரியன என்று முடிவுசெய்யப்பட்டது. அத்துடன் குடும்பர்களுக்கு திருமலைக் குடும்பன் என்ற பட்டமும் வரிவிலக்கு அளிக்கப்பட்ட இரண்டு கோட்டை நெல்பயிரிடும் பரப்புள்ள நிலமும் வழங்கப்பட்டன.
(ARE 1926 பக்.119-120).

(5)…போர்க்களத்தில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிலம் உதிரப்பட்டி அல்லது இரத்தக்காணிக்கை எனப்படும். ஊரின் நன்மைக்காக வேறு வகையில் உயிர் துறந்தவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிலமும் உதிரப்பட்டி என்றே பெயர் பெற்றது.

வெள்ளம் பெருக்கெடுத்தநேரத்தில் குளத்தை அடைக்கும் பணியில் #பெருந்தேவப்பள்ளர் என்பவர் இறந்துபோக, அவரது மகளுக்கு உதிரப்பட்டியாக நிலம்வழங்கப்பட்டது. இச்செய்தியைக் குறிக்கும் கல்வெட்டு வருமாறு
:
“குலைசேகர தேவர் க்கு யாண்ட 34 வது கருங்குளர்த்திக்கு ஒரு பழி உண்திடான படியாலே இப்பழிக்கு இவ்வூர் குடும்பரில் #பெரியதேவப்பள்ளன் அணை வெட்டிப் போகையா லே இவன் மகளுக்கு ஊரார்களிட்ட உதிரப்பட்டி குடுத்தபடி தபான வ நிலம் அரை மா அணை..”

சான்றுகள். 👇

தெ.இ.க.: தென் இந்திய கல்வெட்டு க.எ.: கல்வெட்டு எண் IPS: Inscripts of Pudukkottai State பேரா. ஆ. சிவசுப்ரமணியன்…

தகவலுக்காக இந்த பதிவு

இவண்
வேளாண் விஞ்ஞானி முனைவர் ரா தங்கச்சாமி மதுரை

மள்ளர் வரலாற்று ஆய்வு மையம்

Scroll to Top